சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.152 உயர்வு - 41,000-ஐ நெருங்குகிறது ஒரு சவரன் தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து, சவரன் ரூ.40,840 க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், தொடர்ந்து 40,000 ரூபாயை கடந்து தங்கம் விற்பனை செய்யப்படுவது வாடிக்கையாளர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.



சென்னை: சர்வதேச பொருளாதார சூழல், உலக சந்தையில் தங்கத்தின் மதிப்பு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் தங்கத்தின் விலை கடந்த அக்டோபரில் 40 ஆயிரம் ரூபாயை கடந்த நிலையில், செப்டம்பர் மாதம் முதல் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது.

இதனிடையே இன்று சென்னையில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 உயர்ந்து ரூ.5,105 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை, ரூ.152 உயர்ந்து ரூ.40,840 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் அதிகரித்து ரூ.74.80 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஒரு சவரன் தங்கத்தின் விலை தொடர்ந்து 40 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படுவதால், இனிமேல் அதை வாங்க முடியுமா? என பலரும் அச்சம் கொள்ள தொடங்கியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...