நீலகிரி உதகை அருகே வயதான தம்பதிக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றதாக முன்னாள் அதிமுக அமைச்சர் மீது வழக்குப்பதிவு..!

உதகையில் வயதான தம்பதிக்கு சொந்தமான 15 சென்ட் நிலத்தில் இருந்த தேயிலை செடிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி ஆக்கிரமிக்க முயன்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மணிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ (71). இவர் நீலகிரி மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கணக்காளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவர் தனது மனைவி பிரேமாவுடன் மணிக்கல் கிராமத்தில் தங்களுக்கு சொந்தமான 15 சென்ட் நிலத்தில் உள்ள தேயிலை எஸ்டேட் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் 2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் சுற்றுலாத்துறை மற்றும் உணவுத்துறை அமைச்சராக இருந்த புத்திசந்திரன், ராஜுவிடம் உள்ள 15 சென்ட் தேயிலை தோட்டத்தை விலைக்கு கேட்டுள்ளார்.

இந்நிலையில், குறைந்த விலைக்கு கேட்பதாக கூறி ராஜு விற்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் ராஜூவை முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் மிரட்டியதுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜுவின் நிலத்தில் இருந்த 300-க்கும் மேற்பட்ட தேயிலை செடிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி ஆக்கிரமிக்க முயன்றுள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட ராஜு உடனடியாக மஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட மஞ்சூர் காவல் துறையினர் ராஜூ மற்றும் புத்திசந்திரன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனை தொடர்ந்து, தற்போது அத்துமீறி ராஜூவின் தோட்டத்திற்குள் நுழைதல், நிலத்தை சேதப்படுத்துதல், அச்சுறுத்துதல் என மூன்று பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புத்திசந்திரன் கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு உதகை சட்டமன்ற உறுப்பினராகவும், 2 முறை அதிமுக மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...