கோவையில் ஷேர் மார்க்கெட்டில் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்து பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை - குடும்பத்தார் சோகம்

கோவையில் ஆன்லைன் மூலம் ஷேர் மார்க்கெட்டில் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்து பணத்தை இழந்த இளைஞர் ஒருவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.



கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள கண்ணன் நகர் பகுதியில் வசித்து வந்தவர் சம்பத்குமார். எலக்ட்ரானிக் கடையில் ஒன்றில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்த இவர், தனது சேமிப்பில் இருந்த 15 லட்சம் ரூபாய் பணத்தை குடும்பத்தாருக்கு தெரியாமல் ஆன்லைன் மூலம் ஷேர் டிரேடிங்கில் முதலீடு செய்திருந்தார்.

ஆனால் முதலீடு செய்த பணத்தில் இருந்து சம்பத் குமாருக்கு முறையாக லாபம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்த சம்பத்குமார் ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழந்ததனால் குடும்பத்தாரிடம் சொல்லாமல் பரிதவித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், விபரீத முடிவு எடுத்த சம்பத்குமார் வீட்டில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயன்றுள்ளார். அவருக்கு அதிகளவிலான வாந்தி, மயக்கம் ஏற்பட்ட பின், அவரது மனைவியிடம் தான் பூச்சி மருந்து குடித்ததாக தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பத்குமாரை அவரது மனைவி மற்றும் குடும்பத்தார் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சம்பத்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் மூலம் ஷேர் மார்க்கெட்டில் பணத்தை முதலீடு செய்து நஷ்டத்தை சந்தித்ததால், பூச்சி மருந்து குடித்து உயிரை மாய்த்து கொண்ட சம்பத்குமாருக்கு மனைவி மற்றும் ஒரு கை குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலை மூலம் உயிரை மாய்த்துக் கொள்வது என்பது ஒரு பிரச்சனைக்கான தீர்வல்ல. எனவே, எந்தப் பிரச்னையாக இருந்தாலும் மனம் விட்டு பேசி, தகுந்த ஆலோசனை பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கையை கட்டமைப்பது சாத்தியமே.

தற்கொலைக்கு எதிரான இலவச ஆலோசனை மையங்கள்:

தற்கொலைத் தடுப்பு மையம் - 104

சினேகா தற்கொலைத் தடுப்பு மையம் - 044 - 24640050, 28352345.

பெண்களுக்கான தீர்வு மையம் - 109.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...