கோவையில் ஜன.1 முதல் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு புதிய ஊதியம் - மாமன்றத்தில் தீர்மானம்

கோவை மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் ஊதியமாக ரூ.648.33 வழங்கப்படும் என மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு உள்ளது.



கோவை: கோவை மாநகராட்சியில் கடந்த சில மாதங்களாக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஏற்கனவே ஊதியமாக ரூ.440 வழங்கப்பட்டு வரும் நிலையில், ரூ.721 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கைகளை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை ஏற்றும், அவர்களது நலனை கருத்தில் கொண்டும் ஊதிய உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, வரும் ஜனவரி 1 ம் தேதி முதல் ரூ.648 என சம்பளத் தொகையை உயர்த்தி வழங்கிட சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை அனைத்து வார்டு கவுன்சிலர்களும் ஏற்றதையடுத்து மேயரால் இந்த தீர்மானம் அனுமதிக்கப்பட்டது.

இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் அரசுக்கு கருத்துரு அனுப்புவதாக உறுதி அளித்திருந்தது. இந்த நிலையில் தற்போது ஊதிய உயர்வு தொடர்பாக மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ரூ.648.33 ஆக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஊதிய உயர்வானது, வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல், அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...