கோவை துடியலூர் அருகே சந்தன மரம் வெட்டி கடத்த முயற்சி - தப்பியோடிய மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

துடியலூர் அடுத்த ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டிய நிலையில், பொதுமக்கள் துரத்தியதால், தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே மாநகராட்சி 1வது வார்டு அப்பநாயக்கன் பாளையம் - ஐஸ்வர்யா கார்டன் உள்ளது. இதன் அருகில் நேற்று இரவு மர்ம நபர்கள் தனியார் இடத்தில் இருந்த சந்தன மரத்தை வெட்டி சாய்த்து துண்டு போட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அந்த பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது வெட்டிய சந்தன மரத்தை எடுத்து செல்ல முயற்சி செய்து கொண்டிருந்தவர்களை பொதுமக்கள் துரத்தியபோது மரத்தை விட்டு விட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாமன்ற உறுப்பினர் கற்பகம் ராஜசேகரன் மற்றும் அப்பகுதி மக்கள் போலீசாருக்கும், வனத்துறைக்கும் தகவல் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த போலீசாரிடம் அப்பநாயக்கன் பாளையம், பன்னீர் மடை, வடமதுரை, என்.ஜி.ஜி.ஓ காலனி பகுதிகளில் தொடர்ந்து சந்தன மரங்களை வெட்டி கடத்துவது, வீட்டில் உள்ள காலி கேஸ் சிலிண்டர்கள் திருடுவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இப்பகுதிகளில் போலீசார், இரவு நேர ரோந்து பணிகளை அதிகரித்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...