திருப்பூரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மயான வசதி கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

உடுமலை அடுத்த இலுப்ப நகரில் மயான வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பது உட்பட 21 கோரிக்கைகளை வலியுறுத்தி தாழ்த்தப்பட்ட, அருந்ததியர் இன மக்கள் ஆட்சியரிடம் மனு.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த இலுப்பநகர் பகுதியில் ஏராளமான ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான மயான வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



இந்நிலையில், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மயான வசதி மற்றும் அடிப்படை வசதிகள் உள்பட 21 அம்ச கோரிக்கைகளை செய்து தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இந்த மனுவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் இலுப்ப நகர் பகுதி மக்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...