கோவையில் லாட்டரி விற்ற முதியவர் கைது - லாட்டரி சீட்டுகள், ரூ. 37,500 பணம் பறிமுதல்

குனியமுத்தூர் பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்று வந்த மாற்றுத்திறனாளியான கோவிந்தராஜ் என்ற முதியவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ. 39,500 பணத்தை குனியமுத்தூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.



கோவை: தமிழ்நாட்டு லாட்டரிச் சீட்டுக்கு மட்டுமல்லாமல், பிற மாநிலங்களுடைய லாட்டரிச் சீட்டுகளைத் விற்க, தமிழ்நாடு பரிசுத் திட்டங்கள் தடைச்சட்டம்,1979-ன் கீழ் 2003-ம் ஆண்டு தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை தடை செய்யப்பட்டது.

இருப்பினும், தமிழ்நாடு - கேரளா எல்லையோர மாவட்டங்களில் கேரளா லாட்டரி விற்பனை சட்ட விரோதமாக நடந்து வருகின்றன. குறிப்பாக, கேரளாவிற்கு மிக அருகில் கோவை மாவட்டம் உள்ளதால், தமிழ்நாடு - கேரளா எல்லையில் உள்ள வாளையாரில் இருந்து லாட்டரிகளை வாங்கி வந்து கோவையில் விற்று வருகின்றனர்.

இந்த நிலையில், குனியமுத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரிகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, குனியமுத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்ததில் முதியவர் ஒருவர் போலீசாரிடம் வசமாக சிக்கிக் கொண்டார்.

போத்தனூர் பகுதியைச் சார்ந்த 70 வயது முதியவரான கோவிந்தராஜ் என்பவர் குனியமுத்தூர் பகுதிகளில் கேரளா லாட்டரி சீட்டுகளை விற்று வந்துள்ளார். இவரை, கையும் களவுமாகப் பிடித்த போலீசார், அவரிடம் இருந்து 166 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

ஒரு சீட்டு 40 ரூபாய் மதிப்பீட்டில் மொத்தமாக 6640 ரூபாய் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அது மட்டுமின்றி, 39 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்ட முதியவர், மாற்றுத்திறனாளி என்பதனால் அவரை போலீசார் ஸ்டேஷன் பிணையில் விடுவித்தனர்.

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எசரித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...