கோவையில் எஸ்.பி.ஐ வங்கி ஜன்னலை உடைத்து கொள்ளை முயற்சி - அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் தப்பியோட்டம்..!

கோவை சிட்கோ பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ஜன்னல் கம்பிகளை ஆக்ஸார் பிளேடு மூலம் இரும்பு ஜன்னலை வெட்டி உள்ளே செல்ல முயன்றதும், அப்போது அலராம் ஒலித்ததால் அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது. குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.



கோவை: கோவை சிட்கோ பகுதியில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்.பி.ஐ) நேற்று முன் தினம் வழக்கம் போல வங்கி மேலாளர் முன்னிலையில், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வங்கி மூடப்பட்டது.



இதையடுத்து மீண்டும் நேற்று காலை வழக்கம் போல் உதவி மேலாளர் வங்கியை திறந்துள்ளார். அப்போது, உள்ளே சென்று பார்த்த போது வங்கியில் இருந்த இரும்பு ஜன்னலை வெட்டி உள்ளே சென்ற மர்ம நபர்கள் திருட முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, அவர் உடனடியாக போத்தனூர் போலீஸாருக்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போத்தனூர் குற்றப்பிரிவு போலீஸார், ஜன்னலில் பதிவான கைரேகை உள்ளிட்ட தடயங்களை பதிவுச் செய்தனர். மேலும், வங்கியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், வங்கிக்கு திருட வந்த மர்ம நபர்கள் ஆக்ஸார் பிளேடு மூலம் இரும்பு ஜன்னலை வெட்டி உள்ளே செல்ல முயன்றதும், அப்போது அலராம் ஒலித்ததால் அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.

வங்கிக்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். அதே பகுதியில், தொழிற்பேட்டை அமைந்துள்ளதால் எப்பொழுதும் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் அமைந்துள்ள வங்கியை கொள்ளையடிக்க முயற்சித்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...