கோத்தகிரியிலில் இருந்து கடத்தப்பட்ட 40 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

கோத்தகிரியிலில் சரக்கு வாகனத்தில் மறைத்து கடத்திச் செல்லப்பட்ட 40 மூட்டை ரேஷன் அரிசியைக் குடிமைப் பொருட்கள் கடத்தல் குற்றப்பிரிவு புலனாய்வுத் துறைப் போலீசார் பறிமுதல் செய்ததுடன், சரக்கு வாகன டிரைவரையும் கைது செய்தனர்.



நீலகிரி: கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் சமவெளிப் பகுதிக்கு செல்லும் சாலை வழியாக ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக நீலகிரி மாவட்ட குடிமைப் பொருட்கள் கடத்தல் குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் மேனகா, சப் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார், ஏட்டுக்கள் சுமதி, முருகேசன் மற்றும் ஜெகநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர், குஞ்சப்பனை சோதனைச் சாவடியில் நேற்று காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக சென்ற சந்தேகத்திற்கிடமான சரக்கு வாகனத்தைத் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், அதில் ரேஷன் அரிசி 40 மூட்டைகளில் நிரப்பி, மறைத்து வைக்கப்பட்டு சமவெளிப்பகுதிக்கு கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.



உடனடியாக டிரைவரை கையும் களவுமாகப் பிடித்த போலீசார், அவரிடம் விசாரித்ததில், சரக்கு வாகனத்தின் டிரைவர், ஊட்டி லவ்டேல் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டின் ஜோசப் (வயது 48) என்பதும் கீழ் கோத்தகிரி, தூனேரி பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி சமவெளிப் பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரிய வந்தது.



இதையடுத்து, டிரைவரைக் கைது செய்த போலீசார், பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை ஊட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.

பின்னர் டிரைவர் ஜோசப் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை சிறையில் அடைத்தனர். கடத்தப்பட்ட ரேஷன் அரிசி எங்கிருந்து வாங்கப்பட்டது, யாருக்காக கொண்டுச் செல்லப்படுகிறது..? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...