கோவை காந்திபுரத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் முத்திரையை பயன்படுத்தி போலி உதிரிபாகங்கள் விற்பனை - 4 பேர் கைது

ஆப்பிள் நிறுவனத்தின் முத்திரையை பயன்படுத்தி போலியான செல்போன் மற்றும் உதிரிபாகங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்த 4 பேரை போலீசார் கைது செய்து, போலியான உதிரிபாகங்களை பறிமுதல் செய்தனர்.



கோவை: மற்ற செல்போன்களை விட பன்மடங்கு விலை அதிகம் என்றாலும், ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் செல்போன்கள், ஐபேட், இயர்போன், ஸ்மார்ட் வாட்ச், போன் கவர் போன்றவற்றுக்கு எப்போதும் தனி மவுசு உள்ளது. அவ்வாறு வாங்கும் ஆப்பிள் செல்போன்கள் மற்றும் இதர சாதனங்களை பழுது நீக்க பிரத்தியேகமான சர்வீஸ் சென்டரில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை காந்திபுரத்தில் உள்ள செல்போன் கடைகளில் சிலர் போலியான ஆப்பிள் முத்திரையை பயன்படுத்தி செல்போன் உதிரிபாகங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.

இந்த தகவல் சென்னை சூளைமேட்டில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரி குமரவேல் என்பவருக்கு தெரியவந்ததை அடுத்து, இது குறித்து அவர் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காந்திபுரத்தில் உள்ள செல்போன் கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, போலி முத்திரையை பயன்படுத்தி ஆப்பிள் நிறுவன செல்போன் உதிரிபாகங்களை சில கடைகளில் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், அந்த கடை உரிமையாளர்களான மதுரை காமராஜபுரத்தை சேர்ந்த முகமத் அப்சர்கனி (வயது 24), ராஜஸ்தானை சேர்ந்த வர்தம் சவுத்ரி (23), மகேந்திரசிங் (28), கேரளா பாலக்காட்டை சேர்ந்த நவுசாத் (39), ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அவர்களது கடைகளில் இருந்து போலி முத்திரையுடன் கூடிய 1000 செல்போன் கவர்கள், 25 இயர்போன், 25 யூ.எஸ்.பி கேபில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

காந்திபுரம் பகுதியில் உள்ள செல்போன் கடைகளில் போலீசார் திடீரென சோதனையில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...