கோவை வெள்ளக்கிணறு ரயில்வே கேட் அருகே கஞ்சா விற்ற இரு இளைஞர்கள் கைது

துடியலூர் உதவி ஆய்வாளர் குரு சந்திர வடிவேல் தலைமையிலான காவலர்கள் வெள்ளக்கிணறு ரயில்வே கேட் அருகே உள்ள முள்ளுக்காடு பகுதியில் கஞ்சா பொட்டலங்களை விற்பதற்காக வைத்திருந்த இரு வாலிபர்களை கைது செய்தனர்.



கோவை: கோவை மாவட்டத்தில் கஞ்சா போதை மாத்திரை உள்ளிட்டவற்றை விற்கும் சட்டவிரோத கும்பலுக்கு எதிராக போலீசார் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, கல்லூரிகள் உள்ள இடங்களில் தனிப்படை போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். அதேபோல, பொதுமக்கள் அளிக்கும் ரகசிய தகவல்களை வைத்து கஞ்சா வியாபாரிகளை கைது செய்து வருகின்றனர்.

அதன்படி, கோவை துடியலூர் பகுதியில் கஞ்சா விற்கும் நபர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில், இன்று (30.12.2022) உதவி ஆய்வாளர் குரு சந்திரவடிவேல் மற்றும் காவலர்களுடன் வெள்ளக்கிணறு ரயில்வே கேட் அருகே உள்ள முள்ளுக்காடு பகுதிக்கு விரைந்து சென்று சந்தேகத்திற்கிடமான வகையில் இருவர் நின்று கொண்டிருந்த நபர்களை பிடித்து விசாரணையில் ஈடுபட்டனர்.

விசாரணையில், அவர்கள் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் கே.கே.புதூர் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (21) மற்றும் ஜோசப் டேனியல் (21) என்பதும் தெரியவந்துள்ளது.

இரண்டு நபர்களையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விற்பனைக்கு வைத்திருந்த 1.100 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், இருவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...