சிக்கிமில் பணியின் போது வீரமரணம் அடைந்த கோவையை சேர்ந்த ராணுவ வீரர் உடலுக்கு ஆட்சியர் சமீரன் அஞ்சலி

சிக்கிமில் ராணுவ வாகனம் விபத்தில் சிக்கியதில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கோவையை சேர்ந்த ராணுவ வீரர் மைக்கேல் சாமியின் உடல் கோவை வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் சமீரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


கோவை: வடக்கு சிக்கிமில் உள்ள ஜெமாவில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சாலை விபத்தில் 16 ராணுவ வீரர்கள் இறந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 ராணுவ வீரர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.



இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்து, தொடர் சிகிச்சையில் இருந்த கோவை மாவட்டம் காரமடை ஆசிரியர் காலனியை சேர்ந்த மைக்கேல்சாமி என்ற ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மைக்கேல்சாமி இறுதியாக மேற்கு திரிபுரா மாநிலம் கோர்கா ரைபில்ஸ் ரெஜிமென்டில் பணியாற்றி வந்தார். விபத்தில் சிக்கிய மைக்கேல்சாமி உடல் உடற்கூறு ஆய்விற்கு பின் ராணுவ விமானம் மூலம் கோவை கொண்டு வரப்பட்டது.



கோவை விமான நிலையம் வந்தடைந்த மைக்கேல் சாமியின் உடலுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.



இதையடுத்து அவரது உடல் ராணுவ வாகனத்தில் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...