வால்பாறை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் 12-ம் ஆண்டு தைப்பூசத் திருவிழாவில் பக்தர்கள் உற்சாகம்


வால்பாறை அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் 12-ம் ஆண்டு தைப்பூசத்திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 5-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவை தைபூச விழாக்குழு தலைவர் வள்ளிக்கன்னு துவங்கி வைத்தார்.



தொடர்ந்து 8-ம் தேதியன்று காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. 2 மணிக்கு வால்பாறை எம்.ஜி.ஆர் நகர் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் இருந்து திருமண சீர்வரிசை எடுத்து வந்து முருகன் வள்ளி தெய்வாணைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து பிரதோஷ வழிபாடுகளும் நடைபெற்றது. 



இதைத்தொடர்ந்து வியாழனன்று சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் நல்லகாத்து மைதானத்தில் இருந்து வால்பாறை ஓம்சக்தி வார வழிபாடு குழுவினரின் பால் குடம் மற்றும் சேசு நாடார் தைப்பூச மகளிர் குழுவினரின் கொடுமுடி தீர்த்தம் மற்றும் சேலம் மாதேஷ் அலகு பூட்ட லட்சுமணம் மற்றும் வால்பாறை முருக பக்தர்களின் அங்க அலகு பறவைக்காவடி ஊர்வலமாக வால்பாறை முக்கிய வீதிகளின் வழியாக முருகன் கோவிலை வந்து அடைந்தது.



தொடர்ந்து நடைபெற்ற அன்னதானத்தினை வால்பாறை வட்டாட்சியர் கோமதி, டாக்டர் முனிசாமி, வனச்சரக அலுவலர் சேகர், காவல் ஆணையர் சுப்பிரமணியன், நகராட்சி ஆணையர் சம்பத்குமார் ஆகியோர் துவங்கி வைத்தனர்.



இத்திருவிழாவில் பல்வேறு நடன நாட்டிய நிகழ்ச்சிகள், கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம் ஒயிலாட்டம் ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



தொடர்ந்து இரவு 8 முதல் 11 மணிவரை முருகன் திருவீதி உலா வால்பாறை முக்கிய வீதிகளில் நடைபெற்று, இரவு 12 மணிக்கு வான வேடிக்கையுடன் விழா இனிதே நிறைவடைந்தது. இதில், வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...