திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் பிரசாதமாக வழங்க 8,000 லட்டுகள் தயாரிக்கும் பணிகள் தொடக்கம்

திருப்பூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதற்காக ஒரு லட்சத்து 8000 லட்டுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.


திருப்பூர்: வைகுண்ட ஏகாதசி விழா வரும் திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக திருப்பூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி அன்றைய தினம் வெகு விமர்சையாக நடைபெறும்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சொர்க்கவாசல் வழியாக சென்று சாமியை வழிபடுவது வழக்கம்.



இதனை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதற்காக திருப்பூர் ஸ்ரீவாரி அறக்கட்டளை சார்பாக ஒரு லட்சத்து 8000 லட்டுகள் தயாரிக்கும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.



இதில் 500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு லட்டு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...