உதகையில் பழங்குடியின மாணவர்களுக்கு காவல்துறை சார்பில் திறன் மேம்பாட்டு மையம் - திறந்து வைத்த ஆட்சியர் அம்ரித்

மாவனல்லா கிராமத்தில் பழங்குடியின மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு காவல்துறை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பழங்குடியினர் திறன் மேம்பாட்டு மையத்தை ஆட்சியர் மற்றும் எஸ்.பி திறந்து வைத்தனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கிராமங்களில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பழங்குடியின மாணவர்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, உதகை அருகே உள்ள மாவனல்லா கிராமத்தில் பழங்குடியின மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் விதமாக சுமார் 10 லட்சம் மதிப்பில் பழங்குடியினர் திறன் மேம்பாட்டு மையம் கட்டும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.



அந்த பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இன்று அந்த மையத்தினை நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அம்ரித் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.

மேலும், பழங்குடியின இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் விளையாட்டுப் போட்டிகளில் திறமைகளை வளர்க்கும் வகையிலும், பள்ளி இடைநிற்றலை குறைக்கும் நோக்கில் இந்த மையம் துவக்கப்பட்டுள்ளது.



பள்ளிப்படிப்பு முடிந்தவுடன், போட்டி தேர்வுகளில் வெற்றி பெற புத்தகங்களும் இந்த மையத்தில் இடம்பெற்றுள்ளன.



இந்த மையத்தில் வைக்கப்பட்டுள்ள பல்வேறு உபகரணங்களை பயன்படுத்தி, காலை மற்றும் மாலை நேரங்களில் உடல் பயிற்சி மேற்கொண்டு ஆரோக்கியத்தை பாதுகாக்க வழிவகுக்கும் என்று மையத்தை திறந்து வைத்த பின் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் முடிவில் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் போதை பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழியையும் ஏற்றுக்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...