விபத்தில் சிக்கிய தாய் - மகள்: கோவை தனியார் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த தாயின் உறுப்புகள் தானம்

சத்தியமங்கலம் அருகே ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்ற தாய் - மகள் விபத்துக்குள்ளானதில், சிகிச்சை பலனின்றி தாய் மூளைச்சாவு அடைந்தார். அவரது, கண், இருதயம், கல்லீரல், தண்டு வடம் ஆகிய உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.


கோவை: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மனைவி வித்யா. இவர் அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ள நிலையில், சம்பவத்தன்று வித்யா தனது மூத்த மகளுடன் மொபட்டில் சத்தியமங்கலம் ஆர்.டி.ஓ அலுவலகம் அருகே சென்ற போது பின்னால் வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வித்யா சென்ற மொபட் மீது மோதியது.

இதில், தூக்கி வீசப்பட்டு இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இருவரும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. விபத்தில், வித்யாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் தீவிர அவசர பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த சூழலில், நேற்று அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இது குறித்து, மருத்துவமனை நிர்வாகம் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்த போது அவரது மகள்கள் மற்றும் பெற்றோர் வித்யாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்துள்ளனர்.

இதையடுத்து, மருத்துவர்கள் உடல் உறுப்புகளை தானம் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, கண், நுரையீரல், இருதயம், சிறுநீரகம், தண்டுவடம் ஆகியவற்றை தானமாக பெற்றனர். தொடர்ந்து, ஏற்கனவே நோயாளிகளின் தேவைகளை ஆராய்ந்து அவற்றை சென்னை மற்றும் கோவையில் உள்ள மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டனர்.

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற நிலையில், விபத்தில் சிக்கி தாய் - மகள் ஆகியோர் படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதில் தாய் வித்யா தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தாக, மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உறுப்பு தானம் செய்ய அவரது குடும்பத்தார் முன்வந்ததால், அவரது தண்டுவடம் கோவை கங்கா மருத்துவமனைக்கும், கண் கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கும், சிறுநீரகம் தங்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சையில் உள்ள நோயாளி ஒருவருக்கும், நுரையீரல், இருதயம், கல்லீரல் ஆகியவை சென்னையிலுள்ள மருத்துவமனைகளுக்கும் பாதுகாப்பாக அனுப்பப்பட்டதாக தெரிவித்த மருத்துவர்கள், தாய் மகள் என இருவருக்கும் சிகிச்சை கட்டணம் இலவசமாக்கப்பட்டுள்ளதாகவும், கூறினர்.

அதேபோல், தங்கள் மகள் உயிரிழந்த நிலையில் அவரது உறுப்புகள் ஆறு பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது மகிழ்ச்சி எனவும் ஏற்கனவே தந்தை இல்லாமல் தற்போது தாயையும் இழந்துள்ள இரண்டு பெண்களுக்கும் அரசு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என வித்யாவின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...