புத்தாண்டு கொண்டாட்டம்: முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள விடுதிகளில் பட்டாசு, ஸ்பீக்கர் பயன்படுத்த தடை - வனத்துறை

முதுமலை புலிகள் காப்பகம் வெளிமண்டல வனப்பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிக்கவும், அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி பயன்படுத்தவும் வனத்துறை தடை விதித்துள்ளது.


நீலகிரி: இன்று இரவு ஆங்கில புத்தாண்டை கொண்டாட நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலை புலிகள் காப்பக சரணாலயத்துக்கு உட்பட்ட மசினகுடி, பொக்காபுரம், மவனல்லா ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் தங்கும் விதிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

இந்த நிலையில், வன விலங்குகளை அச்சுறுத்தும் வகையில் புத்தான்டின் போது, தனியார் தங்கும் விடுதிகளில் பட்டாசு வெடிக்க கூடாது, அதிக ஒலி எழுப்பும் வகையில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

அது குறித்து தங்கும் விடுதிகளுக்கு சென்று நோட்டீஸ் வழங்கியும், வனத்துறை வாகனங்களில் சென்று ஒலி பெருக்கி மூலம் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். தடைகளை மீறுபவர்களை கண்காணிக்க தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...