கோவை அருகே கண்டெய்னர் லாரியில் கஞ்சா கடத்தல் - கஞ்சா வியாபாரிகளை கூண்டோடு கைது செய்த போலீஸ்

துடியலூரில் போலீசார் நடத்திய தீவிர வாகன சோதனையில் கண்டெய்னர் லாரியில் கடத்திச் சென்ற 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் போதை பொருள் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக போதை பொருள் விற்பனையாளர்கள் அதிகளவில் தனிப்படை, மதுவிலக்கு போலிசாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை துடியலூர் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் குருசந்திர வடிவேல் மற்றும் காவல்துறையினர் கவுண்டம்பாளையம் சோதனை சாவடி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் கஞ்சாவை கடத்தி சட்ட விரோத விற்பனைக்காக லாரியில் பதுக்கி வைத்து எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் கடத்தலில் ஈடுபட்ட கோவையை சேர்ந்த தங்கப்பாண்டி, ராஜேந்திர பிரசாத், மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஜீவானந்தம், சேலம் மாவட்டத்தை சேர்ந்த ராஜா, மற்றும் சென்னையைச் சேர்ந்த உதயகுமார் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா மற்றும் கண்டெய்னர் லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்த போலிஸார் கைதான ஐந்து பேரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுபோன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் எச்சரித்துள்ளார்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைக்க 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியம் காக்கப்படும் என போலிஸார் தரப்பிலிருந்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...