கோவையில் ஓய்வு பெற்ற உதவி ஆணையர் மற்றும் காவலரின் வீடுகளில் பூட்டை உடைத்து 63 சவரன் நகைகள் கொள்ளை..!

கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சென்ற ஓய்வு பெற்ற உதவி ஆணையர் மற்றும் காவலர் வீட்டின் பூட்டை உடைத்து 63 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் குனியமுத்தூர் அடுத்த கோவைப்புதூரை சேர்ந்தவர் கபிலன் பிரேம்குமார். ஓய்வு பெற்ற உதவி ஆணையரான இவர், புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் பிரார்த்தனைக்காக அருகே வசிக்கும் ஓய்வு பெற்ற போக்குவரத்து தலைமை காவலர் ஜான் சேவியர் என்பவருடன் தேவாலயத்திற்கு சென்றுள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்த பின்னர் நள்ளிரவு 2 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்த போது, இருவர் வீட்டின் முன் கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அப்போது கபிலன் பிரேம்குமார் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து உள்ளே இருந்த 35 சவரன் நகைகள் மாயமானது தெரியவந்தது.

அதேபோல், ஜான் சேவியர் வீட்டின் பீரோவும் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 28 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரும் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் வீட்டில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 63 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...