கோவையில் ‘கிரைண்டர்’ செயலி மூலம் ஓரினச்சேர்க்கையாளரை குறிவைத்து நடந்த வழிப்பறி - கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது..!

ஓரினச்சேர்க்கையை விரும்புபவர்களுக்கான கிரைண்டர் (grindr) செயலி மூலம் கோவையை சேர்ந்த நபரிடம் பழகி நேரில் வரவழைத்து, பணம், நகை, செல்போனை பறித்து சென்ற கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது.


கோவை: கோவையை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர் ஓரினச்சேர்க்கையை விரும்புபவர்களுக்கான “கிரைண்டர்” (Grindr) என்ற செயலியில் கணக்கை தொடங்கி உள்ளார். இந்த நிலையில் இந்த செயலி வாயிலாக ராக்கி என்ற பெயரில் ஒருவர் அவருக்கு அறிமுகமானதாக தெரிகிறது.

கோவையை சேர்ந்த அந்த வாலிபருக்கும் , செயலியில் அறிமுகமான ராக்கி என்ற வாலிபருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு கொண்ட அந்த 30 வயது வாலிபரை புத்தாண்டையொட்டி சந்திக்கலாம் என ராக்கி கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து அவரை சரவணம்பட்டி அருகே ஆளில்லா கட்டிடத்திற்கு வரச் சொல்லி தனிமையில் இருட்டில் சந்திக்கலாம் என ராக்கி தெரிவித்துள்ளார். இதனை நம்பி வந்த அந்த அப்பாவி வாலிபரை இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்துள்ளனர்.

அப்போது அந்த நான்கு பேரும் அந்த வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி தங்க சங்கிலி, தங்க மோதிரம், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே, ராக்கி என்ற பெயரில் செயலில் பேசிய நபர் போலி என்பது தெரியவந்தது. ராக்கி என்ற பெயரில் அறிமுகமான ஓரினச்சேர்க்கை போர்வையில் பணம் பொருளை கொள்ளையடிக்க கொள்ளை கும்பல் செய்த திட்டமிட்ட சதி என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

இந்த வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் நான்கு பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், விசாரணையில் பிடிபட்ட நபர்கள் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகேயன் (27) ராக்கி என செயலில் அறிமுகமான நபர்.

மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மாரிச் செல்வம் (23), மற்றும் தனியார் கல்லூரி விடுதியில் படித்து வரும் திருச்சியை சேர்ந்த அபிராம் (19), கொடைக்கானலை சேர்ந்த ஹரி விஷ்னு (21) என்பது தெரியவந்தது.

இதையடுத்து வழிப்பறி செய்த செல்போன், உள்ளிட்ட பொருட்கள் சரவணம்பட்டி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. ஓரினச்சேர்க்கைக்காக வந்த நபரை கத்தியை காட்டி பணம் பறித்த வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது போன்ற செயலியில் அறிமுகமாகும் நபர்கள் மீது ஆசை காட்டி மோசத்தை அரங்கேற்றுவது தொடர்கதையாகி வரும் நிலையில், இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...