கோவையில் உணவு டெலிவரி ஊழியரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த ஐடி ஊழியர் கைது..!

கோவை ஆர்.எஸ்.புரம் அருகே தனியார் உணவு டெலிவரி ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ஐ.டி ஊழியரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வேலப்பட்டி அடுத்த குரும்பபாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (37). இவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல ஆர்.எஸ்.புரம் ஸ்ரீ சண்முகா சாலையில் நின்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் முத்து குமாரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால் அவர் தர மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி முத்துக்குமார் வைத்திருந்த ரூ.4 ஆயிரம் பணத்தை பறித்து சென்றுள்ளார். இதை கண்ட அங்கிருந்த இளைஞர்கள் சிலர் உதவியுடன் கத்தியை காட்டி மிரட்டிய இளைஞரை மடக்கி பிடித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் பிடிபட்ட இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த பிரமோத் (23) என்பதும், பி.பி.ஏ பட்டதாரியான இவர், ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஐடி ஊழியர் ஒருவர், உணவு டெலிவரி ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...