கோவையில் காணாமல் போன 8 அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை மீட்டு தரக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் புகார்


கோவை மாவட்டத்தில் காணாமல் போன 8 அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை மீட்டு தரக்கோரி இன்று கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் அ.தி.மு.க வினர் புகார் மனு அளித்தனர்.

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் அ.தி.மு.க கட்சியில் மாநகராட்சி 52-வது பகுதி துணை செயலாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் காணாமல் போன 8 அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை மீட்டுத் தரக்கோரி, மாநகர காவல் ஆணையர் அமல்ராஜிடம் புகார் மனு அளித்தார்.

கோவை மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற உறுப்பினர்களில் கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டியை தவிர்த்து மீதமுள்ள 8 சட்டமன்ற உறுப்பினர்களை கடந்த ஒரு வார காலமாக காணவில்லை எனவும், சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும், அவர்களது தொலைபேசி எண்கள் அனைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் சீனிவாசன் தெரிவித்தார்.

இதனால் நலத்திட்டப்பணிகள் முடங்கி இருப்பதாகவும், காணாமல் போன சட்டமன்ற உறுப்பினர்களை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்தார்.

மேலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் எளிதில் அணுகக்கூடிய முதலமைச்சராக இருப்பதாகவும், அ.தி.மு.க தொண்டர்களின் முழு ஆதரவும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...