ஈஷா யோகா மையத்தில் பயிற்சி பெற்றுத் திரும்பிய போது காணாமல் போன பெண் சடலமாக மீட்கப்பட்ட வழக்கு சந்தேக மரணமாக மாற்றப்பட்டது

முன்னதாக, காணாமல் போனதாக பதியப்பட்ட வழக்கு தற்போது சந்தேகம் மரணம் என்ற பிரிவின் கீழ் மாற்றப்பட்டுள்ளது. அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, இன்று பெரியாரிய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவை ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு வந்து வெளியே சென்று மாயமான திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுபஸ்ரீ என்ற பெண் செம்மேடு பகுதியில் தோட்டத்தில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

முன்னதாக, காணாமல் போனதாக பதியப்பட்ட வழக்கு தற்போது சந்தேகம் மரணம் மரணமாக (IPC 174) பிரிவின் கீழ் மாற்றப்பட்டது. அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, இன்று பெரியாரிய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பூரை சேர்ந்த சுபஶ்ரீ கடந்த 11 ஆம் தேதி கோவை ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு வந்துள்ளார். பின்னர், கடந்த 18 ஆம் தேதி பயிற்சி நிறைவடைதற்கு முன்னதாக அவர் ஈஷா மையத்தில் இருந்து வெளியே வந்து மாயமானார்.

மேலும் சுபஸ்ரீ ஈஷா யோகா மையத்தில் இருந்து அவசரமாக வெளியே வந்து சாலையில் ஓடுவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மனைவி காணாமல் போனது குறித்து அவரது கணவர் பழனிக்குமார் ஆலாந்துறை போலீசில் சுபஶ்ரீ மாயமானதாக புகார் அளித்தார்.

ஆலாந்துறை போலீசார் பெண் மாயம் (women missing )என வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று சுபஶ்ரீ செம்மேடு பகுதியில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து பெண் மாயம் என பதியப்பட்ட வழக்கு சந்தேக மரணமாக மாற்றப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...