முதல்வரிடம் மணிமேகலை விருது பெற்ற கோவை மாவட்ட மகளிர் சுய உதவி குழுவினருக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து..!

கோவை மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட "ஆட்சி மகளிர் சுய உதவிக் குழுவினர்" மற்றும் "ஜான்சி ராணி மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு மணிமேகலை விருதினை முதல்வர் வழங்கினார். விருது பெற்ற இரு மகளிர் சுய உதவிக் குழுவினரும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.


கோவை: டிசம்பர் 29ஆம் தேதியன்று திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கினார். மேலும் அந்நிகழ்வில் சிறப்பாக பணியாற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மணிமேகலை விருது உட்பட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

அதன்படி, கோவை மாவட்டத்தை சார்ந்த சிறப்பாக செயல்பட்ட "ஆட்சி மகளிர் சுய உதவிக் குழுவினர்" மற்றும் "ஜான்சி ராணி மகளிர் சுய உதவிக் குழுவினர்" க்கு மணிமேகலை விருதினை முதல்வர் வழங்கினார்.



இந்நிலையில், விருது பெற்ற இரு மகளிர் சுய உதவிக் குழுவினரும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.

விருது பெற்ற மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவரது வாழ்த்துக்களை தெரிவித்து, மேலும் சிறப்பாக செயல்படும்படி வாழ்த்தி ஊக்குவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...