வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 263 பிறந்தநாளையொட்டி, கோவை ஈச்சனாரியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


கோவை: சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 263 பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கும், படத்திற்கும் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளையொட்டி ஈச்சனாரி பகுதியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் இந்நிகழ்வில் சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டன.

இந்த நிகழ்வில் அதிமுக கிணத்துக்கடவு பகுதி கழக செயலாளர்கள், வார்டு கழக செயலாளர்கள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...