கோவையில் வீடு புகுந்து தம்பதியை தாக்கிய 2 இளைஞர்கள் கைது

கோவையில் வீடு புகுந்து தம்பதியை தாக்கிய இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை, செல்வபுரம் அருகே கீரைத்தோட்டம், பாலாஜி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் தனது மனைவி கலா உடன் அப்பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், இவரது வீட்டுக்கு வந்த இரண்டு இளைஞர்கள், ராஜா மற்றும் கலா இருவரையும் சரமாரியாக தாக்கிவிட்டு, கொலைமிரட்டல் விடுத்துவிட்டு தப்பித்துச் சென்றனர். இதுகுறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், கோவையை சேர்ந்த குணசேகரன், தினேஷ் இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், குணசேகரனின் சகோதரர் கார்த்திக் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததை ராஜா மற்றும் கலா இருவரும் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததாகவும், அந்த முன்விரோதத்தில் தம்பதியை தாக்கியதாகவும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...