பல்லடம் அருகே பட்டப்பகலில் இருசக்கர வாகனம் திருட்டு - போலீசார் விசாரணை

பல்லடம் அருகே பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்மநபரை, சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பணப்பாளையம் பகுதியில் விஜயன் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடை உள்ளது.

இந்த கடை முன்பாக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு விஜயன் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது.



அதிர்ச்சி அடைந்த அவர், அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்வது பதிவாகி இருந்தது.



இதுகுறித்து விஜயன் அளித்த புகாரின்பேரில் பல்லடம் போலீசார், சிசிடிவி காட்சிகள் மூலம் மர்மநபரை தேடி வருகின்றனர். தற்போது இந்த திருட்டு சிசிடிவி காட்சிகள், சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பட்ட பகலில் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...