திருப்பூர் அவிநாசி அருகே குப்பை மேட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த பெண் சடலம் - 3 வது கணவருக்கு வலைவீச்சு..!

அவிநாசி அருகே தெக்கலூரில் குப்பைமேட்டில் இரும்பு கருவியால் தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த பெண் சடலத்தை மீட்ட போலீசார், தலைமறைவான 3 வது கணவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த தெக்கலூர் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் பெண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், குப்பை மேட்டின் ஓரத்தில் தலையில் அடிபட்ட நிலையில் இருந்த பெண் சடலத்தை கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண், தெக்கலூர் மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்த பாகுல் என்பவரின் மனைவி சுகன்யா (32) என்பது தெரியவந்தது.

சுகன்யாவின் முதல் கணவர் உயிரிழந்த நிலையில் தனது மகன் மற்றும் மகளுடன் பாகுல் என்பவரை மறுமணம் செய்து வசித்து வந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பாகுலை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.

இரண்டாவது கணவரை பிரிந்து சென்ற சுகன்யா, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த சரவணகுமார் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு கடந்த ஆறு மாதங்களாக அவருடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை சரவணக்குமார் குடிபோதையில் பாகுலிடம் செல்போனில் தொடர்பு கொண்டு, உனது மனைவி விஷம் குடித்து விட்டாள், உனது மனைவியை யாரோ கொன்று விட்டார்கள், அவளின் பிரேதம் தெக்கலூர் பக்கத்தில் ஒரு குப்பை மேட்டில் இருக்கிறது போய் எடுத்துக் கொள், என்று கூறியுள்ளார்.

இது குறித்து உடனடியாக பாகுல் அவிநாசி காவல் துறையிடம் தகவல் அளித்ததை அடுத்து, விரைந்து வந்த போலீசார் சுகன்யாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான சரவணக்குமாரை தேடி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் கொலைக்காக பயன்படுத்தப்பட்ட புட்டர் இஞ்ச் எனப்படும் இரும்பாலான கருவியை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...