பல்லடத்தில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்காக பூமி பூஜை

பல்லடத்தில் புதிய அங்கன்வாடி மையம், பள்ளியில் கழிவறை கட்டடம் கட்டுவதற்கான பணியை எம்எல்ஏ ஆனந்தன் தொடக்கி வைத்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம், அண்ணா நகரில் புதிய அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.



இந்நிலையில், புதிய அங்கன்வாடி மையம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த பணியை பல்லடம் எம்எல்ஏ ஆனந்தன் தொடக்கி வைத்தார்.



மேலும், அண்ணா நகரில் உள்ள அரசு பள்ளிக்கு மாணவர்களுக்கு இருக்கைகள், மேசைகள் மற்றும் உபகரணங்களை வழங்கினார். அதனை தொடர்ந்து மங்கலம் அரசு உயர் நிலைப் பள்ளியில் மாணவ,மாணவிகளுக்காக கூடுதல் கழிவறை கட்டும் பணிக்கான பூமி பூஜையையும் துவக்கி வைத்தார். 15 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவறை கட்டும் பணிகள் துவங்கியது.



இந்த நிகழ்ச்சிகளில் அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், பள்ளி மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...