கோவை கிணத்துக்கடவு அருகே தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் - 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு மக்கள் மீது பாரத்தை போடாமல் உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


கோவை: தமிழகத்தில் சொத்து வரி, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் முன்பு கோவை நகர அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



நகர செயலாளர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் டி.எல்.சிங் அனைவரையும் வரவேற்றார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் மின் கட்டண உயர்வு சொத்து உயர்வு பால் உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.



அப்போது, தமிழக அரசு மக்கள் மீது பாரத்தை போடாமல் உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுக்கரை நகர செயலாளர் சண்முகராஜா, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜேம்ஸ் ராஜா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் கண்ணம்மாள், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய தலைவர் நாகராணி மற்றும் லட்சுமணன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...