தமிழக அரசின் பொங்கல் தொகுப்பில் 2 தேங்காய்கள் வழங்க வேண்டும் - கோவையில் பா.ஜ.க விவசாயிகள் அணி தலைவர் ஜி.கே.நாகராஜ்

தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி வரும் 5 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு பாஜக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என ஜி.கே.நாகராஜ் கூறியுள்ளார்.



கோவை: கோவை மாவட்டம் காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில் பா.ஜ.க விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,



வரும் ஜனவரி 5ஆம் தேதி தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு, அனுமதிக்கப்பட்ட இடங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக தேங்காய் வழங்கி தென்னை விவசாயத்தை காப்பாற்ற கோரி தென்னங் கன்றுகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

ஒவ்வொரு ஆர்ப்பாட்டக் களத்திலும் 4,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச தேங்காய் கொடுத்து தேங்காய் உண்பதால் ஏற்படும் நன்மைகளை விளக்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படவுள்ளது.

தமிழகத்தில் விளையும் முக்கிய உணவுப் பொருளான தேங்காய் கடந்த ஒரு வருடமாக தமிழக அரசின் முறையற்ற நிர்வாகத்தால் விலை மிகவும் குறைந்து கோடிக்கணக்கான தேங்காய்கள் தோப்பில் தேங்கி கிடக்கின்றன.

மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையான கொப்பரை தேங்காய்க்கு ரூ.108.65 வழங்கப்பட்டும், அதிமுக ஆட்சி காலத்தில் கிலோ ரூ.110க்கு விற்ற கொப்பரை தேங்காய் தற்போது திமுக ஆட்சி காலத்தில் ரூ.80 க்கு குறைந்தது. கடும் விலை சரிவால் விவசாயிகள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.



இதன் காரணமாக தென்னை விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்கும் விதமாக தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் ஒரு குடும்ப அட்டைக்கு இரண்டு தேங்காய்கள் வழங்க வேண்டும்.

அவ்வாறு வழங்கும் பட்சத்தில், 2 கோடியே 20 லட்சத்து 40 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கான தேங்காய்கள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்படும்.

இதேபோல், பள்ளி சிறுவர் - சிறுமியர்களுக்கு மதிய சத்துணவுடன் சேர்த்து தேங்காய் சீவல் அல்லது தேங்காய்ப்பாலை வழங்கினால், தாய்ப்பாலுக்கு இணையான மோனோலாரி சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...