அரசியல் ஆலோசனை நிறுவனத்தை தொடங்கிய சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள்

ஐ.பி.டி.எஸ் என்ற அரசியல் ஆலோசனை நிறுவனத்தை தொடங்கியுள்ள லயோலா கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் கோவை பிரஸ் கிளப்பில் அந்த நிறுவனத்தின் இணையதளத்தை அறிமுகம் செய்தனர்.



கோவை: சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சார்பில், ஐ.பி.டி.எஸ்., என்ற அரசியல் ஆலோசனை நிறுவனம் துவக்கப்பட்டுள்ளது.



இந்த நிறுவனத்தின் இணையதள அறிமுக நிகழ்ச்சி, இன்றைய தினம் கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது.



இதில் ஐ.பி.டி.எஸ். நிறுவனர் திருநாவுக்கரசு கூறியதாவது, லயோலா கல்லூரியில் 2002ம் ஆண்டு பண்பாட்டு மக்கள் தொடர்பு மையம் துவக்கப்பட்டு, தேர்தல் தொடர்பான கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டன. இதுவரை 31 கணிப்புகளை வெளியிட்டுள்ளோம்.

2004 லோக்சபா தேர்தல் முதல், கடந்த சட்டசபைத் தேர்தலில் தி.மு.க., 51 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெறும் என கணித்தோம். தற்போது நாங்கள், இண்டியன் பொலிடிகல் டெமாக்ரடிக் ஸ்ட்ராடஜி (ஐ.பி.டி.எஸ்.,) என்ற அரசியல் ஆலோசனை அமைப்பைத் துவக்கியுள்ளோம்.



இதன் இணையதளத்தை http://ipds.com.in/ கோவையில் அறிமுகம் செய்கிறோம். இந்த இணையதளத்தில் எங்களது முந்தைய செயல்பாடுகள், அரசியல் கட்சிகளுக்கு நாங்கள் வழங்கும் சேவைகள் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருக்கும்.

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் தொடர்பான ஆலோசனை, உத்திகளை வகுத்துக் கொடுக்க உள்ளோம். இதுவரை மாநில மற்றும் தேசிய அளவில் 3 கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில், அறிவிப்பு வெளியாகும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...