பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்குக..! - கோவையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கும்படி கோவையில் அதிமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



கோவை: கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், சொத்து வரி, தொழில்வரி, குடிநீர் வரி, மின்சார கட்டணம், உணவு பொருட்கள் விலைவாசி, பால், நெய் விலை உள்ளிட்டவற்றின் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.



டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும், பொங்கல் பரிசாக 5 ஆயிரம் வழங்கும்படியும் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நகர செயலாளர் ஆனந்தன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...