முதுமலை புலிகள் காப்பகத்தில் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சலால் 30 காட்டுப் பன்றிகள் பலி

முதுமலை புலிகள் காப்பகத்தில் வேகமாக பரவி வரும் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சலால் 30-க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழந்து இருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


நீலகிரி: கடந்த சில நாட்களாக முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் 50-க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் தாக்கி இறந்து வருகின்றன. இந்த நிலையில் அந்த தொற்று முதுமலை புலிகள் காப்பகத்திலும் பரவி இருப்பது தெரிய வந்துள்ளது.



கடந்த 2 நாட்களில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட பன்றிகள் இறந்துள்ளன. அவற்றின் உடல்களை மீட்ட வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்து எரித்து வருகின்றனர்.



குறிப்பாக இன்று மட்டும் 4 பன்றிகளின் உடல்களை கைப்பற்றி அவற்றின் உடல் பாகங்கள் சேகரிக்கபட்டு ரசாயன பரிசோதனைகாக அனுப்பி வைக்கபட்டுள்ளன.



இதனால் புலிகள் காப்பக வனத்துறையினர் அச்சமடைந்துள்ளனர்.

தற்போது இறந்துள்ள பன்றிகள் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு தினந்தோறும் வந்து உணவு சாப்பிட்டு செல்பவை என்பதால் வளர்ப்பு யானைகளுக்கு பரவி விடாமல் தடுக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன.



குடியிருப்பு பகுதிகள், யானை முகாம் பகுதிகளுக்குள் காட்டு பன்றிகள் வராமல் தடுக்க சுற்றி சேலைகள் கட்டபட்டுள்ளன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...