முன்னாள் போப், 16-ம் பெனடிக்ட் மறைவு: கோவை ராமநாதபுரம் ஹோலி டிரினிட்டி தேவலாயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை

கோவை ராமநாதபுரம் ஹோலி டிரினிட்டி தேவலாயத்தில் மறைந்த முன்னாள் போப் ஆண்டவரின் ஆன்மா சாந்தியடைய, ராமநாதபுரம் மறைமாவட்ட ஆயர் டாக்டர் மார் பால் ஆலப்பாட் தலைமையில் சிறப்பு திருப்பலியும், பிரார்த்தனையும் நடைபெற்றது.


கோவை: முன்னாள் போப், 16-ம் பெனடிக்ட் மறைவையொட்டி அவரது ஆன்மா சாந்தியடைய, கோவை ராமநாதபுரம் ஹோலி டிரினிட்டி தேவலாயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது.

கடந்த 10 ஆண்டுகளாக தனது ஓய்வு காலத்தை வாடிகனில் கழித்து வந்த நிலையில், உடல் மூப்பு காரணமாக தனது 95 ஆவது வயதில் காலமானார்.

இந்நிலையில் அவரது மறைவையொட்டி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இரங்கல் கூட்டம் மற்றும் சிறப்பு பிரார்த்தனைகளை நடத்தி வருகின்றனர்.



அதன்படி, கோவை ராமநாதபுரம் சீரோ மலபார் மறை மாவட்டம் சார்பாக, கோவை ராமநாதபுரம் ஹோலி டிரினிட்டி தேவலாயத்தில் மறைந்த முன்னாள் போப் ஆண்டவரின் ஆன்மா சாந்தியடைய சிறப்பு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.



ராமநாதபுரம் மறைமாவட்ட ஆயர் டாக்டர் மார் பால் ஆலப்பாட் தலைமையில் சிறப்பு திருப்பலியும், பிரார்த்தனையும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிஷப் பால் ஆலப்பாட், மறைந்த போப் 16 ஆம் பெனடிக்ட் எட்டு ஆண்டு காலமே பதவியில் இருந்த போதும், கத்தோலிக்க சபையின் வளர்ச்சியிலும், திருச்சபையின் விசுவாசிகளுக்கு இறையியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், திருச்சபையின் போதனைகளை வெளியிடுவதிலும் முக்கிய பங்கு வகித்தார்.



சிறந்த இறை நேசராக விளங்கிய அவரது அஞ்சலி பிரார்த்தனை கூட்டத்தில், மறை மாவட்டத்தில் உள்ள அருட் தந்தையர்கள், மத போதகர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் என்றார்.

ஜெர்மனியை சேர்ந்த முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட் 2005 ஆம் ஆண்டு கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பதவியேற்றார். அவர், 1977 முதல் 1982 ஆம் ஆண்டு வரை முனிச்சின் பேராயராக இருந்தபோது முறைகேடு வழக்குகளைக் கையாண்டதில் தவறுகள் புரிந்ததாக புகார் எழுந்த நிலையில், அதை ஏற்றுக்கொண்டு அவர் பதவி ஏற்று 8 ஆண்டுகளிலேயே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதன்படி, 1415 ஆம் ஆண்டில் கிரிகோரிக்கு பிறகு தனது பதவியை ராஜினாமா செய்த முதல் போப், பெனடிக்ட் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...