இளைஞர்களிடையே சினிமா மோகம் மற்றும் போதை இல்லையென்றால் தமிழ்நாடு எங்கேயோ போயிருக்கும் - கோவையில் பாப்புவா நியூ கினியா நாட்டின் கவர்னர் சசீந்திரன் முத்துவேல்

கோவை தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாப்புவா நியூ கினியா நாட்டின் கவர்னர் சசீந்திரன் முத்துவேல், மாணவர்களுடனான கலந்துரையாடலில், ஒரு அரசு சாராயத்திலிருந்து காசை பெற்று, மருத்துவத்துக்கு வழங்கினால், அதில் ஒரு பிரயோஜனமும் இல்லை என்றார்.


கோவை: ஒரு அரசு, சாராயம் விற்பதில் இருந்து வரும் காசை கொண்டு, மருத்துவத்துக்கு வழங்குவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை.



சினிமா மோகம் மற்றும் போதை ஆகியவற்றை எடுத்து விட்டாலே, தமிழ்நாடு எங்கேயோ போயிருக்கும் என்று பாப்புவா நியூ கினியா நாட்டின் கவர்னர் சசீந்திரன் முத்துவேல் தெரிவித்துள்ளார்.



கோவை தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாப்புவா நியூ கினியா நாட்டின் கவர்னர் சசீந்திரன் முத்துவேல், மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

கலந்துரையாடலின் போது, மாணவர் ஒருவரின் கேள்வக்கு பதிலளித்தவர், பெரும்பான்மையான இளைஞர்கள் யாரோ ஒருவர் நடிப்பதற்கு பெரிய கட் அவுட் வைத்து நேரத்தை வீணடிப்பதோடு, தாய் - தந்தை தரும் பணத்தை வீணடிப்பதாக பதில் அளித்தார்.



மேலும், பெரும்பான்மையான இளைஞர்கள் சினிமாவில் நடித்தால் அவர்களை பெரிய ஆளாக பார்ப்பதாகவும், சினிமாவில் நடித்து பிரபலமாகிவிட்டால் அவர்களை தலைவர்களாக ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை தமிழகத்தில் குறிப்பாக தென்னிந்தியாவில் இருக்கிறது.

இது மிகப்மிகப்பெரிய பலவீனம் என்று தெரிவித்தார்.

மேலும், அரசுக்கு நிதி தேவை என்றால் அதற்கு நிறுவனங்கள் தொடங்கி பணம் சம்பாதிக்கலாம் அரசு சாராயத்திலிருந்து காசை வாங்கி, மருத்துவத்துக்கு வழங்கினால் அதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. 90% குற்றங்கள் நடப்பதற்கு மதுவும், போதையும் தான் காரணம். என்ன தான் அதை நியாயப்படுத்தினாலும், பாதிப்பு தான் அதிகமாக இருக்கும் எனவும் தெரிவித்தவர்.



சினிமா மோகம் மற்றும் போதை ஆகியவற்றை எடுத்து விட்டாலே, தமிழ்நாடு எங்கேயோ போயிருக்கும். இவை இரண்டும் இருந்தும் தமிழ்நாடு வளர்ந்து வருகிறது என்றால் இவை இல்லையென்றால் இந்திய வல்லரசாகி இருக்கும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...