கோவை பன்னிமடை அருகே தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் - விவசாயிகள் அச்சம்

கோவை பன்னிமடையை அடுத்த தாளியூர் புறா தோட்டம் ராஜகோபால் என்பவரது தோட்டத்தில் நேற்று இரவு இரண்டு காட்டு யானைகள் புகுந்தது. தோட்டத்தில் இருந்த அவரது வீட்டில் இருந்து யானைகள் உலா வருவதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.


கோவை: கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான ஆனைகட்டி மற்றும் மாங்கரை பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. அவ்வப்போது மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவததை யானைகள் வழக்கமாக கொண்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக தடாகம் பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை காட்டு யானை அங்குள்ள தோட்டங்களில் தினமும் இரவில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.



நேற்று இரவு, பன்னிமடையை அடுத்த தாளியூர் புறா தோட்டம் ராஜகோபால் என்பவரது தோட்டத்தில் இரண்டு காட்டு யானைகள் புகுந்துள்ளது. தோட்டத்தில் காட்டு யானைகள் உலா வருவதை அவர்கள் வீடியோ எடுத்த நிலையில், தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...