கர்நாடக அரசு பேருந்தில் உதகைக்கு கடத்தி வரப்பட்ட 50 பண்டல் குட்கா பறிமுதல்

உதகை மத்திய பேருந்து நிலையத்தில் மேற்கொண்ட சோதனையில், கர்நாடக அரசு பேருந்தில் கடத்தி வரப்பட்ட 50 பண்டல் குட்கா பொருட்களை, இன்ஸ்பெக்டர் பிலிப் தலைமையிலான போலீசார் கைப்பற்றி, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஆனது வடக்கே கர்நாடகா மாநிலமும், மேற்கே கேரளா மாநிலமும் எல்லைகளாக கொண்டுள்ளது. இதனால், சட்டவிரோதமாக ரேசன் அரிசி, மரம் மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தல் சம்பவங்களை தடுக்க மாநில எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சமீப காலமாக கர்நாடக மாநிலத்திலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வருவது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, உதகை மத்திய பேருந்து நிலையத்திற்கு, கர்நாடகா மாநிலத்திலிருந்து வரும் KSRTC அரசு பேருந்தில், போதை பொருட்கள் கடத்தி வருவதாக உதகை நகர் மேற்கு காவல் நிலைய G1 காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனை தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் பிலிப் தலைமையிலான போலீசார் பேருந்தில், கர்நாடக அரசு பேருந்தில் சோதனை செய்த போது, 50 பண்டல் போதை வஸ்து (Hans) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அவற்றை சத்தியமங்கலம் புஞ்சை புளியம்பட்டியை காந்தராஜ் (33) என்ற நபர் எடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதனையடுத்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...