வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள்: திருப்பூரில் அதிவேகமாக பைக்கில் ஊர்வலம் சென்ற இளைஞர்கள் - போலீசாருடன் வாக்குவாதம்

திருப்பூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்துக்களை ஏற்படுத்திய இளைஞர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்களிடம் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.



திருப்பூர்: வீரபாண்டிய கட்டபொம்மனின் 264 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினரும் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். குறிப்பாக, வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தினர் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள மன்னரைப் பகுதியில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் இன்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



தொடர்ந்து, வீரபாண்டிய கட்டபொம்மன் அமைப்பைச் சார்ந்த இளைஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் ஊத்துக்குளி சாலையில் இருசக்கர வாகனத்தில் கூச்சலிட்டபடி சாலைகளில் ஊர்வலமாக சென்றனர்.



அப்போது, கருமாரம்பாளையம் அருகே வந்த போது, வாகனங்கள் விபத்துக்குள்ளானது.



அதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களிடம் சட்டம் ஒழுங்கிற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர்.



அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் உதயகுமார், உதவி ஆய்வாளர் இளஞ்செழியன் ஆகியோரின் சட்டையை பிடித்து தகராறில் ஈடுபட்டனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இளைஞர்களின் செயல், பொதுமக்கள் மத்தியில் முகச்சுளிப்பபை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...