கோவையில் குடித்துவிட்டு தகராறு - தட்டிக்கேட்டவரை தாக்கிய 4 பேர் கைது

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் குடித்துவிட்டு சத்தம் போட்டுக் கொண்டிருந்தவர்களை தட்டிக்கேட்டவரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் லூனா நகர் பகுதியை சேர்ந்தவர் அன்புராஜ். இவரது வீட்டின் முன் நேற்று முந்தினம் 4 பேர் குடித்துவிட்டு சத்தம் போட்டுக்கொண்டிருந்தனர். அதிகமாக சத்தமிட்டு கூச்சலிட்டதால், அவர்களை அன்புராஜ் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நால்வரும், அன்புராஜை கடுமையாக தாக்கிவிட்டு தப்பித்துச் சென்றனர். காயமடைந்த அன்புராஜை, அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அன்புராஜின் கன்னத்தில் 3 தையல்கள் போடப்பட்டுள்ளன.

இதுகுறித்து துடியலூர் காவல் நிலையத்தில் அன்புராஜ் புகார் அளித்தார். இதன்பேரில், தாக்குதலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த கார்த்தி, அழகர்சாமி, பூபேஷ், ஸ்ரீராம் என 4 பேரையும் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...