நீலகிரி உதகையில் நடைபெற்ற கோத்தர் இன மக்களின் குலதெய்வ பண்டிகை - பாரம்பரிய இசை, நடனத்துடன் நிறைவு

உதகை அடுத்த கோக்கால் கிராமத்தில் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த கோத்தர் இன மக்களின் குலதெய்வ பண்டிகையின் இறுதியில் பாரம்பரிய இசையுடன் அரங்கேறிய ‘ஆட்குப்ஸ்’ நடனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள கோக்கால் கிராமத்தில் கோத்தர் இனத்தை சேர்ந்த 120 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது குல தெய்வமான அய்யனோர், அம்மனோர் கோவில் திருவிழாவை கொண்டாடுவது வழக்கம்.

இந்த நிகழ்விற்கு முன்னதாக அந்த கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளில் இறந்தவர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டும் நடத்தப்படும் வர சாவு நிகழ்ச்சியை நடத்தினர்.

இதனை தொடர்ந்து கடந்த 23ஆம் தேதி முதல் தங்களது கிராமத்திற்குள் வெளியாட்களை அனுமதிக்காமல், விரதம் இருந்து தினந்தோறும் பல்வேறு சடங்குகளை கடைபிடித்து அய்யனோர், அம்மனோர் பண்டிகைக்கு ஏற்பாடு செய்தனர்.

இதையடுத்து, கடந்த 27ஆம் தேதி வழிபாடு செய்வதற்கு புதுப் பானை தயாரிக்க களிமண் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் களிமண்ணை தலை மீது சுமந்து சென்று, தங்கள் வீடுகளில் புது பானைகள், தட்டுகளை தயாரித்தனர்.

இந்நிலையில் புத்தாண்டன்று, சாமை அரிசி, அவரை மற்றும் நெய் ஆகியவற்றால் உணவு தயாரித்து குலதெய்வங்களுக்கு படைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.



அப்போது, கிராமத்தின் மைய பகுதியில் பாரம்பரிய உடைகள் மற்றும் அணிகலன்கள் அணிந்து ஒன்று திரண்ட கோத்தர் இன மக்கள், தங்களது கலாச்சார இசையுடன் உற்சாகமாக நடனமாடினர்.



மேலும், 10 நாட்கள் நடைபெற்ற இந்த குல தெய்வ பண்டிகையின் இறுதியாக ஆண்கள் ராஜாக்களை போல தலைபாகையுடன் வேடமிட்டு ஆட்குப்ஸ் என்ற நடனம் அரங்கேற்றியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...