கோவை சின்ன தடாகம் அருகே போர்வெல் குழாய்களை சேதப்படுத்தி காட்டு யானை அட்டகாசம் - பரபரப்பு..!

சின்ன தடாகம் அருகே மணி என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை, அங்கிருந்த போர்வெல் குழாய்களை சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியான ஆனைகட்டி மாங்கரை வனப்பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வசித்து வருகின்றன.

இங்குள்ள காட்டு யானைகள் அவ்வப்போது மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் தோட்டங்கள் மற்றும் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாகி வருகிறது.

இதனிடையே தடாகம் பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களில் கடந்த 2 மாதங்களாக தினமும் இரவு நேரத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் கோவை சின்ன தடாகம் பகுதியில் மணி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்றிரவு புகுந்த காட்டு யானை அங்கிருந்த போர்வெல் குழாய்களை பிடுங்கி சேதப்படுத்தி விட்டுச் சென்றுள்ளன. இச்சம்பம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக விவசாய நிலங்களில் யானைகள் புகுவதை உடனடியாக தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...