கோவை கிணத்துக்கடவு அருகே சொந்த தம்பியை கத்தியால் குத்திக் கொலை செய்த அண்ணன் கைது..!

கிணத்துக்கடவு அடுத்த வடபுதூர் பகுதியில், தேங்காய் வியாபாரம் செய்து வந்த சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தம்பியை கத்தியால் குத்திக் கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த வடபுதூர் பகுதியை சேர்ந்தவர் சங்கரம்மாள். இவரது மகன்களானமகாலிங்கம் மற்றும் ஆறுச்சாமி ஆகிய இருவரும் அதே பகுதியில் தேங்காய் வியாபாரம் செய்து வருகின்றனர்

இந்த நிலையில், தேங்காய் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த சில நாட்களாக சகோதரர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே நேற்றிரவு வடபுதூர் பேருந்து நிறுத்தம் அருகே சகோதரர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது, தம்பி ஆறுச்சாமி, அண்ணன் மகாலிங்கத்தை அடித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அண்ணன் மகாலிங்கம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆறுச்சாமியின் வயிற்றில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ஆறுச்சாமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிணத்துக்கடவு போலீசார், ஆறுச்சாமியின்உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்தஅண்ணன் மகாலிங்கத்தை, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அண்ணனே சொந்த தம்பியை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...