போதையில்லா மாவட்டமாக மாற்றப்படும்..! - நீலகிரி புதிய எஸ்பி பிரபாகர் உறுதி

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பிரபாகர் பொறுப்பேற்றுக் கொண்டார்.



நீலகிரி: நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஆசிஸ் ராவத், சமீபத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றபட்டார். அவருக்கு பதிலாக சென்னை மெட்ரோ தலைமை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பிரபாகர் நியமிக்கபட்டார்.



இதையடுத்து இன்று ஊட்டி வந்த பிரபாகர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளாவில் இருந்து மாவோயிஸ்ட் அமைப்பினர், நீலகிரி மாவட்டத்திற்குள் வராமல் தடுக்கப்படும் என்றும், ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், போதையில்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.



இவர் 2005 -ஆம் ஆண்டு குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி- ஆக ஆக பணியில் சேர்ந்தார் பிரபாகர். பின்னர் வால்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தமிழக அதிரடி படையில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய அவர், இறுதியாக சென்னை மெட்ரோ தலைமைபாதுகாப்பு அதிகாரியாக இருந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...