திருப்பூர் அருகே நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து கால்பந்து மைதானம் திறப்பு - பொதுமக்கள் போராட்டம்

நஞ்சராயன் குளத்தின் நீர்வழி பாதையை ஆக்கிரமித்து கால்பந்து மைதானம் கட்டிய தனியார் பள்ளியை கண்டித்து நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் திருப்பூர் மாவட்டம், கூலிப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 440 ஏக்கர் பரப்பில் நஞ்சராயன் குளம் உள்ளது. இந்த குளத்தின் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து, விகாஸ் வித்யாலயா பள்ளி நிர்வாகம், கால்பந்து மைதானத்தை கட்டி வருகிறது. இதற்கான திறப்பு விழா விரைவில் நடக்க உள்ளது.



நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து கால்பந்து மைதானம் கட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கூலிப்பாளையம் நான்கு ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்ககோரி கோஷங்களை எழுப்பினர்.



நஞ்சராயன் குளத்தை பாதுகாக்க கோரியும் நீர் வழிபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழக முதல்வரை சந்திக்க உள்ளதாக நஞ்சராயன்குளம் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈசன் முருகசாமி தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...