ஈஷாவிற்கு சென்ற பெண் உயிரிழந்த வழக்கில் முதல்வர் தயங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் - கோவையில் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன்

சுபஸ்ரீ வழக்கில் தமிழக காவல்துறை மென்மையான போக்கை கடைபிடிக்க கூடாது என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வழக்கில் தயங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முத்தரசன் வலியுறுத்தல்.



கோவை: கோவையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு அலுவலகத்தில், அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, ஈஷா யோகா மையத்தில் யோகா பயிற்சி முடிந்த நிலையில் மாயமான சுபஸ்ரீ என்ற பெண், மர்மமான முறையில் உயிரிழந்து விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஈஷா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ், மத்திய அரசுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால், சுபஸ்ரீயின் மரணம் மறைக்கப்படுகிறது என பொதுமக்களுக்கு ஐயம் உள்ளது. ஜக்கி வாசுதேவ் செல்வாக்குடன் இருக்கலாம். ஆனால் சட்டத்தின் முன் அனைவரும் சமம்.

காவல்துறையின் அமைதி புதிராக உள்ளது. மாநில அரசு நீதிபதியை தேர்வு செய்து, முழு விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் தான் படுகொலைகளை நிறுத்த முடியும். இச்சம்பவம் தொடர்பாக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுமுகம் தலைமையில் விசாரணை நடத்த வலியுறுத்தி வரும் 6ஆம் தேதி கோவை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ஈஷா பலரின் பினாமியாக செயல்படுகிறது. ஈஷா விவகாரத்தில் மற்ற அரசியல் கட்சிகளை சந்தித்து பேசி அனைத்து முன் முயற்சிகளையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ளும்.

ஈஷா விவகாரத்தில் தமிழக காவல்துறை, மாவட்ட காவல்துறை மென்மையான போக்கை கையாளாமல் இருக்க வேண்டும். பெண்கள் மீது விரும்பத்தகாத வேலையில் யார் ஈடுபட்டாலும் தவறுதான். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக கூட்டணி கட்சிகள் அடிமையாக இருப்பதாக கூறிய அதிமுக முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணியின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய அவர், மோடியின் காலில் விழுந்தவர் தான் எஸ்.பி. வேலுமணி. அவரை போல அடிமை யாரும் இல்லை. அவருக்கு திமுக கூட்டணி கட்சிகளை பற்றி பேச தகுதியில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...