கோவையில் அரசு பேருந்து மோதி பலியான தூய்மை பணியாளர்கள் - ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க கோரி ஆட்சியரிடம் சமூக நீதிக்கட்சி மனு

கோவையில் இன்று காலை அரசு பேருந்து மோதி உயிரிழந்த தூய்மைப் பணியாளர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் சமூக நீதி கட்சி சார்பில் மனு.


கோவை: கோவை மாவட்டம் ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் - தேவி தம்பதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. கணவன், மனைவி இருவரும் கோவை மாநகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை பணிக்காக சைக்கிளில் சென்ற போது, அரசு பேருந்து மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



இதனிடையே உயிரிழந்த தூய்மை பணியாளர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க கோரி சமூக நீதி கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், உயிரிழந்த தூய்மை பணியாளர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

மேலும் தூய்மை பணியாளர்களின் வேலை நேரத்தை காலை 7 மணியாக மாற்றிட வேண்டும். இவ்வாறான கோரிக்கைகள் அந்த மனுவில் முன்வைக்கப்பட்டுள்ளது.

தூய்மை பணியாளர்களின் நேரம் குறித்து சமூக நீதி கட்சியின் சார்பில் பலமுறை ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...