ஈரோடு எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவு - கோவை எம்எல்ஏ வானதி சீனிவாசன் இரங்கல்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திருமகன் ஈவேரா மறைவுக்கு, கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.


கோவை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பிற்கு அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பாஜக மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமன திருமகன் ஈவெரா, 46 வயதில் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து, பெரும் அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன்.

சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்கும்போது, அவருடன் பலமுறை உரையாடியிருக்கிறேன். கட்சி வேறு, சித்தாந்தம் வேறு என்றாலும் சகோதர பாசத்துடன் பழகியவர். மகனை இழந்துள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை.

பெரும் இழப்பை சந்தித்துள்ள ஈ.வி.கே.எஸ். குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...