கோவையில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற நபருக்கு 3 ஆண்டுகள் சிறை..!

கோவை பொள்ளாச்சி அருகே கடந்த 2018 ஆம் ஆண்டு சுமார் 1.3 டன் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்ற பால்பாண்டி என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து, நீதிமன்றம் உத்தரவு.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த திவான் புதூர் பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி (43). இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது இருசக்கர வாகனத்தில் மலையாண்டி பட்டணத்தில் இருந்து கோட்டூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது வாகன தணிக்கையில் இருந்த குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் பால்பாண்டியை பிடித்து சோதனை செய்தபோது, அவரது இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கோட்டூர் அருகே புளியமரத்தடியில் சுமார் 1.3 டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

மேலும் இவர், பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசியை மலிவு விலையில் வாங்கி, அதை அதிக லாபத்தில் கேரளாவிற்கு விற்பனை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணை நிறைவடைந்து பால்பாண்டி குற்றவாளி என நீதிபதி சரவணபாபு அறிவித்தார்.

தமிழகத்திலிருந்து ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்ற குற்றத்திற்காக அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக மூன்று மாதங்கள் சிறை தண்டனை என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...