தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு, இயற்கையில் கலந்தது ஜல்லிக்கட்டு - பல்கலை ஆய்வறிக்கை முடிவில் தகவல்

தமிழக கலாச்சாரம், பண்பாடு இயற்கை கலந்த நிகழ்வாக ஜல்லிக்கட்டு உள்ளது என பாரதியார் பல்கலை ஆய்வறிக்கை முடிவில் தகவல் வெளியாகியுள்ளது.



கோவை: பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரியின் தொடர்பியல்துறை பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்(பணி ஓய்வு) முனைவர் சி.பிச்சாண்டி மேற்பார்வையில் பழனியப்பன் என்ற ஆராய்ச்சி மாணவர் ‘ஜல்லிக்கட்டு’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டார். இதன் வாய்மொழி தேர்வு சமீபத்தில் பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது.

மணிப்பால் உயர்கல்வி நிறுவனம் மற்றும் தொடர்பியல் கல்வி நிறுவனத்தின் பெருநிறுவன தொடர்பியல்துறை உதவி பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கே.பத்மகுமார் வெளிப்புற ஆய்வாளராக பங்கேற்றார்.



ஆய்வறிக்கை முடிவுகள் குறித்து பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரியின் தொடர்பியல்துறை பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்(பணி ஓய்வு) முனைவர் சி.பிச்சாண்டி கூறியதாவது:

தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு இயற்கை கலந்த நிகழ்வு ஜல்லிக்கட்டு. இதை பல கோணங்களில் பார்க்க வேண்டும். தமிழர்கள் சார்பில் எருது, பசு, காளை மாடு உள்ளிட்டவற்றை வணங்கும் விதம் மற்றும் கால்நடைகளுடன் பழகி விளையாடும் நிகழ்வு தான் ஜல்லிக்கட்டு.



தமிழர்களின் கலாச்சாரத்தில் இருந்து இதை பிரித்து பார்ப்பது தவறு. ஜல்லிக்கட்டு கடவுள் நம்பிக்கை நிகராக கருதப்படுகிறது. இந்திய கலாச்சாரத்தில் பசுமாடுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

ஆனால் தமிழர்கள் கலாச்சாரத்தில் காளை, எருதுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

கோயில்களில் சிவபெருமானுக்கு எதிராக நந்தி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு மாதந்தோறும் பிரதோஷம் என்ற பெயரில் தொடர்ந்து நடக்கிறது. தமிழ்நாட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை இத்தாலி உள்ளிட்ட வெளிநாடுகளுடன் ஒப்பிட்டு பார்ப்பது தவறு.

அரசியல் இயக்கங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல், அரசியல் கலப்பு இல்லாமல் சுயம்பாக உருவாகி நாடு தழுவிய இயக்கமாக உருவாகிறது என்றால் அது புரட்சியின் அடிப்படை.

அதே போன்று தான் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழர்களின் வாழ்வியல் போராட்டமாக அமைந்தது. வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்துக்கு நிதியுதவி, உணவு உள்ளிட்டவை மக்கள் சார்பில் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றிக்கு ஊடகத்துறை மிக முக்கிய பங்கு வகித்தன.



ஒருபுறம் தமிழகம் தைப்பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தயாராகி வரும் நிலையில், மறுபுறம் பீட்டா அமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில் இந்த ஆய்வுக்கட்டுரை முடிவு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது, என்றார்.

தமிழகத்தின் தலைசிறந்த கோட்பாட்டியல் வல்லுநர், ஒப்பிலக்கியத்தில் சிறந்த நிபுணர், திருச்சி பாரதிதாசன் பல்கலை, முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் பேராசிரியர் ராமமூர்த்தி, முன்னாள் மேயர் ராஜ்குமார், பூ.சா.கோ கலை, அறிவியல் கல்லூரி தொடர்பியல்துறை தலைவர் முனைவர். ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...